காலி பிரதேசத்தில் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்பகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 51 வயதுடைய நபரொருவரே தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படாத நிலையிலே இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 3