கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் நடத்திய தாக்குதல்களினால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மாகாண சபை கட்டிடம் என்பனவும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலங்கம, டென்சில் கொப்பே கடுவ மாவத்தை, நின்ற இந்த நபர் அங்கு பயணித்த வாகனங்கள் மீது இந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிலரால் தாக்கப்பட்டு முல்லேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post Views: 3