தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பது தொடர்பிலான தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை, எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்கக்கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.