Tamil News Channel

கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில்  இன்று (16) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டக் களத்தில் மலர் வளையங்கள், மற்றும் உயிரிழந்த சடலங்களைப் போல உருவங்களை வடிவமைத்து கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு  முன்பாக மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் இலங்கையில் போலி மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பில்  முன்னாள் அமைச்சர் கெஹலியவே  பதில் கூற வேண்டும் எனவும் இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து  ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டக்களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும், கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்துவதற்கு கலகத் தடுப்பு பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts