கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு வீதியில் 69 கிலோமீற்றர் மைல்கல் அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.07) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹன்தெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







