சாம்சங் நிறுவனம் வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட் வரிசையில் தனது சமீபத்திய பதிப்பான கேலக்ஸி பட்ஸ் 3 சீரிஸை பாரிஸில் நடந்த கேலக்ஸி அன்பேக்ட் ஈவென்ட் 2024-இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கேலக்ஸி பட்ஸ் 2 சீரிஸின் வெற்றியை தொடர்ந்து, இந்த புதிய இயர்பட்கள் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு மேம்பாடுகளைக் கொண்டுள்ளன.
இந்த ஹெட்செட்கள் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 6 மற்றும் சாம்சங் கேலக்ஸி Z பிளிப் 6 உடன் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
கேலக்ஸி பட்ஸ் 3 சீரிஸின் தனித்துவமான அம்சமானது கேலக்ஸி AI கொண்டுள்ளதால், இது தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது.
கூடுதலாக, வாய்ஸ் கமாண்ட் ஃபங்க்ஷனாலிட்டி ஆனது யூசர்களை சிங்கள் வாய்ஸ் இன்ஸ்ட்ரக்ஷன் மூலம் மியூசிக் ப்ளேபேக்களை கட்டுப்படுத்த முடியும்.
இயர்பட்களில் அடாப்டிவ் ஈக்யூ மற்றும் அடாப்டிவ் ஏஎன்சி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன, அவை ஒலியின் தரம் மற்றும் இரைச்சல் ரத்து ஆகியவற்றை செய்வதன் மூலம் சிறந்த மியூசிக் அனுபவத்தை வழங்குகிறது.
கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோவில் அடாப்டிவ் நாய்ஸ் கன்ட்ரோல், சைரன் டிடெக்ட் மற்றும் வாய்ஸ் டிடெக்ட் ஃபங்க்ஷனாலிட்டி ஆகியவை அடங்கும்.
கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோவில் அதிவேக ஆடியோ அனுபவத்திற்காக கேணல் டைப் வடிவமைப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் கேலக்ஸி பட்ஸ் 3 -இல் ஓபன் டைப் வடிவமைப்பை வழங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோவில் ஹை ரேன்ஜ் சவுண்ட்க்காக பிளானர் ட்வீட்டர் மற்றும் கிரிஸ்டல் கிளியர் ஆடியோவிற்கான டூயல் அம்பிளிபைர் ஆகியவற்றை கொண்ட 2 – வே ஸ்பீக்கரைக் கொண்டிருக்கும்.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ மொத்த பேட்டரி ஆயுளில் 30 மணிநேரம் வரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் கேலக்ஸி பட்ஸ் 3 மொத்த பேட்டரி ஆயுளை 24 மணிநேரம் வரை வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 சீரிஸ் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP57 மதிப்பீட்டில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
கேலக்ஸி பட்ஸ் 3 சீரிஸ் ஆனது சில்வர் மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ண வண்ணங்களில் வருகிறது, மேலும் நவீன மற்றும் வசதியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த இயர்பட்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், ஜூலை 24 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
கேலக்ஸி பட்ஸ் 3 இன் விலை ரூ.14,999 ஆகவும், அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோவின் விலை ரூ.19,999 ஆகவும் கிடைக்கும்.