February 11, 2026
கைக்கோடாரி சின்ன சுயேட்சை குழுவின் அலுவலகம் திறந்து வைப்பு..!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

கைக்கோடாரி சின்ன சுயேட்சை குழுவின் அலுவலகம் திறந்து வைப்பு..!

Apr 29, 2025

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் கைக்கோடாரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு – 02 இன் 10ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்றைய தினம் திங்கட்கிழமை தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனால் திறந்து வைக்கப்பட்டது.

தொழிலதிபர் சுலக்சனின் வழிகாட்டலில் வலிகாமம் கிழக்கில் சுயேட்சை குழு – 2 இல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தனது வேட்பாளர்களை ஆதாரித்து, கோப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ள சுலக்சன் 10ஆம் வட்டாரத்திற்கான அலுவலகத்தை திறந்து வைத்தார்.

நிகழ்வில் 10ஆம் வட்டார வேட்பாளரான சிவயோகராசா சிவநிக்ஸன், சக வேட்பாளர்கள், ஆதரவலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *