December 13, 2025
கைதிக்கு சூட்சுமமான முறையில் கைவிலங்கு சாவி கொடுக்க முன்றவர் கைது..!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

கைதிக்கு சூட்சுமமான முறையில் கைவிலங்கு சாவி கொடுக்க முன்றவர் கைது..!

Dec 13, 2024

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் கைவிலங்கு சாவியை கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்கு சென்ற போது சிறைச்சாலை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் கொண்டு சென்ற பணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைவிலங்கு சாவி ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *