மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகள் குழுவொன்று கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியுள்ளனர்.

அங்கு ஹெரோயின் 1 கிலோ 09 கிராம் மற்றும் ஹெரோயின் 205 கிராம் ஆகியவற்றை வைத்திருந்து மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற இந்த 2 சந்தேக நபர்களையும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் அங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் 24 மற்றும் 25 வயதுடைய மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், ஒரு சந்தேக நபர் தங்கியிருந்த அறையில் இருந்து ரிப்பீட்டர் வகை துப்பாக்கி, T56 உயிர் தோட்டாக்கள் 56, பிஸ்டல் உயிர் தோட்டாக்கள் 47 ஆகியவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here