இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு மேற்கொள்ளும் விசாரணைக்காக வாக்குமூலம் அளிப்பதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (04) முற்பகல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.

அங்கு சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர்,  அவர் அந்த விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். அதன்படி சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here