மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணாவ சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (18.08) கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.