இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியல் தொடர்பான நடவடிக்கை குறித்து வழிமுறைகளைப் பெறுவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் இயக்குநர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு தொடர்ந்து வருகை தருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
அந்தப் பட்டியலில் எனது பெயர், கஞ்சன விஜேசேகர மற்றும் ரமேஷ் பத்திரான ஆகியோரின் பெயர்களும் உள்ளன. மஹிந்தானந்த அளுத்கமகேவும் இவ்வாறே கைது செய்யப்பட்டார்.
முன்னைய அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் அமைச்சுகளின் கீழ் வரும் திணைக்களங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொள்கின்றனர் ஆனால் அதற்காக முன்னாள் அமைச்சர்களை கைதுசெய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.