சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.
வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காது அதனை மீண்டும் வழங்குவதற்காக ரூபா 5,000 இலஞ்சமாக கோரி அதனை பெற்றதன் காரணமாக இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் நேற்று (02) பிற்பகல் சீதுவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்குள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய பொலிஸ் கொன்ஸ்டபிள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.








