மாத்தளை பிரதேசத்தில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு நீதி கோரி இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர் நண்பர்களுடன் நண்பனின் காதலியைச் சந்திக்கச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று சிறுவர்களும் சிறுமியின் தந்தை உட்பட ஒரு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் 17 வயது சிறுவன் உயிரிழந்தான்.
இந்த கொலை தொடர்பாக சிறுமியின் தந்தை உட்பட 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறந்த சிறுவனுக்காக நீதி கோரி வடக்கு மாத்தளையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது.