தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ அணுகு வீதிகளுக்கு இடையில் 95.8 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று இன்று (5) காலை கவிழ்ந்தது.
இச்சம்பவத்தால் மாத்தறைக்கு செல்லும் பாதை தடைபட்டதுடன், போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடையூறு காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையின் பாதிக்கப்பட்ட பகுதியில் மாத்தறை நோக்கி சிறிய கார்கள் மட்டுமே தற்போது செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.