கொழும்பு ஆர்மர் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று நேற்றைய தினம் (03) அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
திடீரென உணவகத்திற்குள் நுழைந்த சிலர் வாள்கள் மற்றும் தடிகளால் உணவகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் உணவகத்திற்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் நுழைந்த விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்த உணவக உரிமையாளருக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு ஆர்மர் வீதி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.