கொழும்பு, நுகேகொட பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் இல்லத்திற்கு முன்பாக வெளிநாட்டில் வசிக்கும் குற்றவாளியொருவரால் மலர்வளையம் வைக்கப்பட்டுடிருந்தது.
இது தொடர்பில் பொலிஸ் குழுக்கள் பல விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகேகொட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த மலர்வளையத்திற்கு அருகில், “நம்மை விட்டுப் பிரிந்த போசடாவுக்கு (தொழிலாளியின் பெயர்) ஆழ்ந்த இரங்கல்” என பெரிய எழுத்திலும், “உனக்கு நான் கடைசிக் கடிதம் எழுதுகிறேன்” என்று அட்டைப் பெட்டியில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தொழிலதிபர் அதுருகிரி என குற்றக் கும்பல் தலைவரான லடியாவின் கும்பலுக்கு பணம் வழங்குவதாகவும் அதனை நிறுத்தவில்லை என்றால் பார்த்துக் கொள்வதாகவும் பாதாள உலகக் குழு உறுப்பினர் சபுகே மனோஜ் முத்துகுமார் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்து வர்த்தகரின் வீட்டுக்கு முன்னால் மலர்வளையம் வைத்ததாகக் கூறப்படும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த இருவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிலதிபர் வீட்டுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் பல விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகினமை குறிப்பிடத்தக்கது.