கந்தானை நகரில் கடந்த சில நாட்களாக, மரியாள் போன்று உடையணிந்து சுற்றித் திரிந்த பெண் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த சில நாட்களாக கந்தானை நகரில் வெண்ணிற ஆடை அணிந்து உலாவந்ததுடன் அவர் ஒரு வெளிநாட்டுப் பெண்ணாக சந்தேகிக்கப்படலாம் என்றும், மரியாளின் சாயலைச் சித்தரிப்பதாகவும் இதனடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸாரிடம் வினவிய போது அவர் ரஷ்ய பெண் என, விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இந்த நாட்டிற்கு வந்து பௌத்த தியான முறைகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் அவர் கத்தோலிக்க பெண்ணாக இருந்தாலும் பௌத்த தத்துவத்தை பயின்று வருவதாகவும், இதனிடையே கந்தானை பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துளமை குறிப்பிடத்தக்கது.