வெளிவிவகார அமைச்சு, புவிசார் அரசியல் வரைபடவியலாளருடன் இணைந்து, மத்திய ஆசிய மன்றத்தை நாளைய தினம்(21.08) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இரண்டு அமர்வுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வு, யூரேசியா மற்றும் அதற்கு அப்பால் மத்திய ஆசியாவின் மூலோபாய பங்கை ஆராயும் வகையில் புதிய போக்குவரத்து மற்றும் தளவாட தாழ்வாரங்களின் தோற்றத்திற்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிராந்தியத்துடன் இலங்கை தனது பொருளாதார உறவுகளை வலுப்படுத்த முற்படுகையில், பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழுமைக்கு உந்துதல் அளிக்கக்கூடிய ஒருங்கிணைப்புகளை கட்டியெழுப்புவதில் சிறப்பு கவனம் செலுத்தி, முன்னால் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்தும் இவ்மன்றத்தில் ஆராயப்படவுள்ளது.
குறித்த மன்றமானது கஜகஸ்தானில் இலங்கையின் வதிவிடப்பணியை நிறுவுவதற்கான முடிவு மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின் முடிவில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆரம்ப உரையையும் ,வெளிவிவகார அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியும் உரையாற்றவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனைத் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் நிபுணர்கள், கஜகஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் நிபுணர், ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் (CICA) செயலகம், எரிக் சோல்ஹெய்ம், சர்வதேச தூதர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.