கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற 5 வயது குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 09 ,தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நீச்சல் குளத்தில் வேறு பல குழந்தைகளுடன் அந்த குழந்தை நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளது.
பின்னர் குழந்தையின் தந்தையால் ஜாஎல பிரதேச வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post Views: 2