கொழும்பு – கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபரிடம் இருந்து 372 கிராம் ஹெரோயின் மற்றும் 1.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் இசைக்கருவிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.