கொழும்பில் WHO-வின் 78வது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய மாநாடு தொடக்கம்!
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய மாநாடு இன்று (13) கொழும்பில் தொடங்கியது.
இம்மாநாட்டில் இலங்கை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்கள், ஒரு வருட காலத்திற்கு பிராந்திய மாநாட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்கள் – அதாவது அக்டோபர் 13 முதல் 15 வரை நடைபெறும் இம்மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், WHO தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் டாக்டர் கேத்தரின் போஹ்மே, பல நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், தூதர்கள் மற்றும் WHO நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டின் முக்கிய நோக்கம், பொதுமக்களின் சுகாதார சவால்கள், முன்னைய ஆண்டுகளின் முன்னேற்றங்கள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்து, அனைவருக்கும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வழங்குவதற்கான புதிய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை உருவாக்குவது ஆகும்.
இம்மாநாடு இலங்கையின் சுகாதார துறையில் சர்வதேச அளவிலான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
![]()