December 9, 2025
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து!
News Updates உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து!

Aug 18, 2024

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

கேகாலை மொலகொட பிரதேசத்தில் இரண்டு கார்கள் மோதியதில் குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனங்களில் இருந்த எட்டு மாதங்கள் மற்றும் ஒன்றரை வயதுடைய இரண்டு குழந்தைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரின் சாரதி தூங்கியமையே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்,

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *