January 13, 2026
கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து!
புதிய செய்திகள்

கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து!

Jan 23, 2025

பதுளை-கொழும்பு பிரதான வீதியில், தெமோதர சந்தியில் ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் ஒரு சக சாரதி காயங்களுக்கு உள்ளானதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து பதுளைக்கு ஓடுகளை ஏற்றிச் சென்ற இந்த லொறி, இன்று (23) காலை தெமோதர சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லொறியில் ஏற்றப்பட்டிருந்த ஓடுகள் உடைந்து சேதமடைந்ததாகவும், லொறியும் பலத்த சேதமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக, வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *