Tamil News Channel

கொவிட்19 தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட AstraZeneca..!

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை தடுப்பதற்காக  கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன.

இதில் இங்கிலாந்தை சேர்ந்த AstraZeneca நிறுவனம் மற்றும் Oxford பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.

இந்தியாவில் Covishield என்ற பெயரில் இந்த தடுப்பூசி  விநியோகிக்க  Serum Institute of India(SII) நிறுவனம்   university and the Swedish-British drugmakerக்கு அனுமதி வழங்கி  தடுப்பூசி விநியோகிக்கப்பட்டது.

இதற்கிடையே AstraZeneca நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி  2023 ஆம் ஆண்டு  ஜேமி ஸ்கொட் (Jamie Scot )என்பவர் நீதிமன்றில் வழக்கு பதிவுசெய்தார்.

அதனைத்தொடர்ந்து 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டன. இவ்வழக்குகள் மீது விசாரணை நடந்து வரும் நிலையில் AstraZeneca நிறுவனம் நீதிமன்றில் அளித்த ஆவணத்தில், கொவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (T.T.S) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts