கொழும்பு நாராஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த சில்லறை விலை 45 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 890ரூபாவாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், புதிய கோழி ஒரு கிலோ 1020 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், தோலுடன் கூடிய கோழி ஒரு கிலோ இறைச்சியின் விலை 970 ரூபாயும் ஆகும்.
ஒரு கிலோ உறைந்த கோழி இறைச்சி 970 ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கறி கோழி 1100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ ஹபாத் 1450 ரூபாய்க்கும் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 3400 ரூபாய்க்கும், ஒரு கிலோ மாட்டிறைச்சி 2500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Post Views: 2