வடக்கு கிழக்கு மாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் கழகத்தினர் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.
வடக்கு கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த சக்கர நாற்காலியில் துடுப்பாட்டம் விளையாடக்கூடியவர்களை உள்வாங்கி குறித்த கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றது.
குறித்த துடுப்பாட்ட அணியின் தலைவர் M.முகமட் அலி கருத்து தெரிவித்தார்.தேசிய ரீதியில் சென்று விளையாடிய வடமாகாண வீரர்களுடன் ஏனைய வீரர்களை உள்வாங்கி தேசிய ரீதியில் சாதிப்பதே தமது நோக்கம் எனவும் தமது விளையாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வளங்கள் பெரும் சவாலாக இருப்பதாகவும் குறிப்பாக துடுப்பாட்டத்திற்குரிய சக்கரநாற்காலி கூட இல்லை எனவும் புலம்பெயர்ந்த உறவுகள் தமக்கு உதவ வேண்டும் என தெரிவித்தனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.