
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த சிலி…!!
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது கடற்கரை நகரமாக அன்டோஃபகாஸ்டாவில் பூமிக்கு அடியில் 126 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு சிலி நாட்டில் 8.8 ரிக்டரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 526 பேர் உயிரிழந்தனர். அத்துடன் கடந்த ஜனவரி மாதம், வடக்கு சிலியின் டாராபாக்காவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், சிலி நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.