சங்குப்பிட்டி பாலம் மரணம் – குடும்பப் பெண் படுகொலை ; மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
பூநகரி – சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 36 வயதான இரு பிள்ளைகளின் தாயாரே இந்த சம்பவத்தின் பலியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் தலைமையில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியம் வெளிப்பட்டுள்ளது.
உடற்கூறாய்வு தகவலின் படி,
அவரது தலையில் காயங்கள் காணப்பட்டுள்ளதுடன்,
முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டது,
பின்னர் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது நுரையீரலில் நீர் புகுந்ததினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பதும், அது மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என்பதும் உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சடலத்தில் நகைகள் காணப்படவில்லை. அந்தப் பெண் வீடைவிட்டு புறப்பட்டபோது 10 பவுண் தங்க நகைகள் அணிந்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது, வவுனியா நோக்கி நண்பியுடன் செல்வதாகக் கூறியிருந்தாலும், இதுவரை நடைபெற்ற விசாரணைகளில் அந்த தகவல் உண்மையல்ல என்பது உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாலும், உடற்கூறாய்வில் அத்தகைய ஆதாரங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது.
யாழ்ப்பாணப் பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் தெரிவித்துள்ளார்.
![]()