இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்ச்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் வீரர் விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.
விராட் கோஹ்லி சர்வதேச ஒருநாள் போட்டிகளில், அதிக சதம் பெற்ற வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நேற்றைய தினம் முறியடித்தார்.
463 போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுகர் 49 சதங்கள் என்ற சாதனையை பதிவு செய்திருங்தார்.
இந்த சாதனையை 291 போட்டிகளில் விளையாடிய விராட் கோஹ்லி 50 சதங்களை பெற்று முறியடித்தார்.
இதனை நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரை இறுதி போட்டியில் இந்திய வீரர் விராட் கோஹ்லி முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.
இந்த சாதனையை பெற்ற பின்னர் விராட் கோஹ்லி மைதானத்தில் வைத்து சச்சின் டெண்டுல்கருக்கு தலை வணங்கி மரியாதை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர், அரவிந்த . டி .சில்வா மற்றும் கால்பந்து வீரர் டேவிட் பெக்ஹம் உட்பட சில நட்ச்சத்திர வீரர்கள் போட்டி நிறைவடந்த பின்னர் மைதானத்திற்கு வந்து விராட் கோஹ்லிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.