வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளார்.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இவர் வடமேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் வடமேல் மாகாண சபை கலைக்கப்படும் வரை முதலமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.