குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ‘மகென் ரட்டட்ட’ அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்த எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.