அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரும் சபாநாயகருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (18.06)சபை கூடப்பட்டுள்ளது.
இதன்போது சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாத சேவை நீடிப்புக்காக பரிந்துரைத்துள்ளதால், அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்தை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஒத்திவைக்க வேண்டியிருந்தது.
எவ்வாறாயினும், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.