November 17, 2025
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் கைது!
புதிய செய்திகள்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் கைது!

Nov 4, 2024

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று (03) விசேட அதிரடிப்படை கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, சேனாதீர அவர்களின் மேற்பார்வையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயவர்தன, கொனஹேன முகாமின் பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. குணதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஜா-எல நகரசபை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடவடிக்கையில் வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,000 பிளாட்டினம் ரக சிகரெட்டுகளை வைத்திருந்த, மடுல்சிமவைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஜா-எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *