இலங்கை கடற்படையினர் இன்று (நவம்பர் 3) காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர்.
அவர்கள் மூன்று படகுகளில் எல்லை தாண்டி வந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.



