வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் 30வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட மரங்கள் சுமார் 20இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மீட்கப்பட்ட மரங்களையும் சந்தேக நபரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.