December 13, 2025
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இஞ்சி!
புதிய செய்திகள்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இஞ்சி!

Aug 20, 2024

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 519 கிலோகிராம் 750 கிராம் இஞ்சியுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மன்னார் இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது உழவு இயந்திரத்தில் கொண்டு செல்லப்பட்ட இஞ்சிப் பொதியுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

44 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *