யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவியரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச்சாட்டின் பேரில் 1,184 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 59 பேர் தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று (5) தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பாவணைக்கு அடிமையான 29 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 23 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்குவியல் வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது.
இச் சுற்றிவளைப்பின் போது 337 கிராம் ஹெரோயின், 242 கிராம் ஐஸ், 6 கிலோ 629 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.