நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த நிறுவனங்களுக்கு 124 கோடி 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதில் ஒரு நிறுவனத்துக்கு 17 கோடி 90 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தங்கம் இறக்குமதியை மேற்கொள்ளும் அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும் இந்த சட்டவிரோத செயல்களில் இருந்து விடுபட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானத்தை இழக்கும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தங்கப் பொருட்களை இறக்குமதி செய்யும் சில தரப்பினர் அதனை பெரும் மோசடியாக மாற்றியுள்ளதாகவும் அதனைச் சுற்றி ஒரு மாஃபியா இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.