January 13, 2026
சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கைது..!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கைது..!

Apr 15, 2025

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 34 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (4/15/2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவர்.

சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 22,800 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 114 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *