சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது!

0
3

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (07) அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவருகிறது.

இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here