Thursday, March 12, 2026

சட்ட விரோத மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!!!

Must Read

சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த பொகவந்தலாவ ராணி காடு பகுதியை சேர்ந்த நால்வர் நேற்று (18.06) இரவு பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று (19.06) மதியம் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை எதிர்வரும் 25 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் முந்நிலைப்படுத்தும் படி  உத்தரவு இடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights