December 9, 2025
சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பந்துலால் பண்டாரிகொட..!
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பந்துலால் பண்டாரிகொட..!

Aug 21, 2024

பந்துலால் பண்டாரிகொட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (21.08) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மனுஷ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததன் காரணமாக பந்துலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றம் கடந்த  9 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

இதற்கமைய தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *