2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை வேட்பாளராக முன்னிறுத்தியமை தான் வாழ்நாளில் செய்த வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மனவேதனைப்பட்டுள்ளார்.
நாங்கள் நாட்டுக்காக அரசியல் செய்பவர்கள் தற்போதுள்ள அரசியல்வாதிகளுடன் எனக்கு அரசியல் செய்ய முடியாது.
கட்சியின் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு என்னிடம் பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் நான் மறுத்து விட்டேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெடுப்ப என்னால் முடியும் நான் ஆதரவு வழங்குவேன்.
கட்சியை உடனடியாக பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது.
கட்சியை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான ஆதரவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழங்குவார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு உதவி புரியவே சந்திரிக்கா வந்துள்ளார் என தற்போது பெரிய பொய்யொன்றை கூறுகின்றனர்.
எனக்கு அப்படி எந்தவொரு ஆசையும் இல்லை. நான் எப்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காகவே பணியாற்றுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.