Tamil News Channel

Blog Post

Tamil News Channel > புதிய செய்திகள் > சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு!

சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு!

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவின் ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (15) இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

எம்பிலிபிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த புகாரின் படி,  குறித்த வீட்டின் படுக்கையறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் இறந்து கிடந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் துங்கம, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து சுமார் 8 வருடங்களாக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த மரணம் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருப்பதும் கவனிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது  கொலையா என்பதை அறிய எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *