யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இன்று காலை 10:45 மணியளவில் நடைபெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் செஞ்சொற் செல்வர் செல்வவடுவேல் தலமையில் பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமானது.
இதில் அயில் வேலன் கவி எனும் தலைப்பில் உள வளத்துணையாளர் நா.நவராஜ் அவர்கள்ஆண்மீக உரை நிகழ்த்தினார்
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களுக்கு அம்பாறை உகந்தை முருகன் ஆலயத்தில் சமையலுக்கு தேவையான உணவுப் பெருட்கள் வழங்கிவைக்கப்பட்டுடன் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.