யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் நாளாந்த நிகழ்வான 13ம் திருவிழாவாகிய நேற்று வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைபண்பாட்டுப் பேரவையின் ஆன்மீக அருளுரையினை யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்ற உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி நிகழ்த்தினார்கள்.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் திரு சிவநாதன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிருவாகிகள், தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.