சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் சிவநாதன் தலைமையில் இடம் பெற்றது. பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பான நிகழ்வில் முருகப்பெருமான் புகழ்பாடும் பண்ணிசைக் கச்சேரி இடம் பெற்றது
இதில் அருள் விக்னேஸ்வரன் அவர்கள் பாடல் வழங்க கீபோட்டினை
கலைமணி நடேசு செல்வச்சந்திரன் அவர்களும்
மிருதங்க இசையினை விரிவுரையாளர் மகேந்திரம் லோகேந்திரம் அவர்களும்,
தபேலா இசையினை வித்துவான் மகேந்திரம் பிரபா ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான சாந்தை, பண்டத்தரிப்பை சேர்ந்த மாணவிக்கு ரூபா 135,000 பெறுமதியான மடிக்கணினி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டன. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Post Views: 2