சபாநாயகருக்கு எதிரான தீர்மானங்கள் பற்றி எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தலைமையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சியினர் தற்போது உள்ள அரசியல் சூழலை பயன்படுத்தி தமது இருப்பினைத் தக்க வைப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடாத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஆளும்கட்சிக்குள் இருந்து சிறு பிரிவினர் நாடாளுமன்றத் தேர்தலை தான் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் இவர்களுக்கு எதிராக கணக்காய்வு அறிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் .
மேலும் இவர்கள் பணபலத்தை வைத்து வென்று விடலாம் என்று நினைக்கின்றனர் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.