சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சியினர் முன்வைத்த பிரேரணைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.
அரசியலமைப்பு மற்றும் ஏனைய பொருத்தப்பாடுடைய சட்டங்களின் தேவைப்பாடிற்கிணங்க 2024 செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரினால் கூட்டாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இந்த ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.
அதற்கமைய இன்று (11) வாய்மூல விடைக்கான வினாக்களை அடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 வரை விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post Views: 5